தேடல்

ராணுவ தலைமையக கேண்டீன் முறைகேடு: சி.ஏ.ஜி. க்கு அந்தோணி உத்தரவு

புதுடில்லி: முப்படையில் உள்ள கேண்டீன்களில் நடந்த முறைகேடு தொடர்பாக மத்திய தணிக்கை குழு விசாரணைக்கு மத்திய அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மத்திய அரசின் ராணுவம், விமானப்படை, கப்பல்படை ஆகிய முப்படை தலைமையகங்களில் கேண்டீன்களில் மான்யமாகவழங்கப்பட்ட உணவுப்பொருட்கள் விநியோகத்தில் ரூ. 10 ஆயிரம்கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மறு தணிக்கைஆய்வு செய்ய மத்திய ராணுவ அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதனை மத்திய ராணுவ அமைச்சர் ஏ.‌கே. அந்தோணி இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.