தேடல்

திருப்பதியில் சச்சின்

திருப்பதி:இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின், திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தார்.சதத்தில் சதம் அடித்து அசத்திய சச்சின், சமீபத்தில் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். சவுராஷ்டிரா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை பைனலில், மும்பை அணி சார்பில் பங்கேற்றார்.நேற்று முன்தினம் திருப்பதிக்கு சென்ற அவர், அதிகாலை சுப்ரபாத தரிசனத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர், வெள்ளை வேஷ்டி, சட்டை அணிந்திருந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பட்டாடை போர்த்தப்பட்டது. லட்டு மற்றும் தீர்த்தம் வழங்கப்பட்டது.