தேடல்

திருவொற்றியூர் நெடுஞ்சாலை விரிவாக்கம் துவக்கம்:போலீஸ் பாதுகாப்புடன் கட்டடங்கள் இடிப்பு

சென்னை : பல மாதங்களாக இழுத்தடிக்கப்பட்டு வந்த திருவொற்றியூர் நெடுஞ்சாலை விரிவாக்க பணி, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று துவங்கியது.
சுங்கச்சாவடியிலிருந்து

எர்ணாவூர் மேம்பாலம் வரை 5 கி.மீ.,தூரம் திருவொற்றியூர் நெடுஞ்சாலை

உள்ளது. இந்த சாலை விரிவாக்கத்திற்காக,சாலையோர கட்டடங்களை அகற்ற மாநில

நெடுஞ்சாலை துறை முயன்றது. ஆனால், அந்த முயற்சி ஆறு ஆண்டுகளாக இழுபறியில்

கிடந்தது. இந்நிலையில், சாலை விரிவாக்க பணி கடந்த ஜனவரி இறுதியில்

துவங்கி, பிப்ரவரி மாதம் வரை மொத்தம் 20 நாட்கள் நடந்தது.போலீஸ்

பாதுகாப்பு தராததால் கட்டடங்கள் இடிப்பு பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இருளில் சாலை இதனால்,

திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் புதிய தார்சாலை, மின்விளக்குகள், மழைநீர்

வடிகால்வாய் அமைக்காமல் நெடுஞ் சாலை துறை கிடப்பில் போட்டது. நெடுஞ்சாலையின்

இருபுறமும் மின்விளக்குகள் இல்லாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. சாலை

விரிவாக்க பணிகளை துவக்க வேண்டும் என, தினமலர் நாளிதழில் விரிவான செய்தி

வெளியாகியது.
இந்நிலையில், திருவொற்றியூர் நெடுஞ்சாலையில், முதல்

கட்டத்தில் விடுபட்ட திருவொற்றியூர் காலடிப்பேட்டைஎல்லையம்மன் கோவில் வரை

சாலை அகலப்படுத்த பொக்லைன் மற்றும் கட்டடங்களை துளையிடும் இயந்திரங்கள்

வரழைக்கப்பட்டன.
நேற்று காலை 10:00 மணிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் சாலை விரிவாக்க பணியை துவக்கினர். கட்டடங்கள் இடிப்பு சாலையோரமிருந்த

அடுக்குமாடி குடியிருப்புகள், சிறிய கோவில், மசூதி, தனியார் மருத்துவமனை,

மாநகராட்சி அலுவலக சுற்றுச்சுவர்இடித்து தள்ளப்பட்டன. இதையொட்டி,

திருவொற்றியூர் சுங்கச்சாவடி முதல் போக்குவரத்து முற்றிலும்

நிறுத்தப்பட்டது. இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரி கூறியதாவது: சி.டிஎச்.,

சாலை எட்டு பிரிவாக பிரிக்கப்பட்டு பணி நடக்கிறது. ஏற்கனவே நான்கு பிரிவு

சாலை விரிவாக்க பகுதிகள், கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரிமாதம் இடித்து

தள்ளப்பட்டன. அடுத்த நான்கு பிரிவுக்குரிய இடங்களில் வசித்தோருக்கு இழப்

பீட்டு தொகை வழங்கப்பட்டு, திருவொற்றியூர் அஜாக்ஸ் பகுதியிலிருந்து சாலை

விரிவாக்கம் செய்யப்பட்டது. தற்போது இறுதி கட்ட சாலை விரிவாக்க பணி

துவங்கியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.