தேடல்

திருத்தணி பெண்ணுக்கு 5 கிலோ எடை குழந்தை

திருத்தணி: திருத்தணியில் பெண் ஒருவருக்கு 5.1 கிலோ எடை கொண்ட குழந்தை பிறந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த கே. கே. சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசுலு. இவரது மனைவி அனிதா (23). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அனிதா திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இன்று காலை 11.38 மணிக்கு ஆபரேஷன் மூலம் அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அக்குழந்தையின் எடை 5.1 கிலோ என டாக்டர்கள் தெரிவித்தனர். திருவள்ளூர் மாவட்டத்திலேயே இந்த அளவு அதிக எடை கொண்ட குழந்தை பிறந்துள்ளது இதுவே முதல் முறை என மருத்துவமனை டாக்டர்கள் வேத பிரியா மற்றும் மோகனன் தெரிவித்தனர்.