தேடல்

"ரத்தம் சிந்தாத' ஜல்லிக்கட்டு

மதுரை:போலீசார் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்ததால், மதுரையில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கள், ரத்தம் சிந்தாதமல் நடந்து முடிந்தன.
ஜன., 14ல் அவனியாபுரம், 15ல் பாலமேடு, 16ல் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடந்தது. மாட்டின் கொம்பை பிடிக்கக்கூடாது, வாலைப் பிடித்து இழுக்கக்கூடாது. அடிக்கக்கூடாது, என, கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. போலீஸ் உயர்அதிகாரிகள் தொடர்ந்து மைக் மூலம், வீரர்களை வலியுறுத்திக் கொண்டே இருந்தனர். விதி மீறுபவர்களை, உடனடியாக மைதானத்தில் இருந்து வெளியேற்றினர்.
மாடுகள் துன்புறுத்தப்படாததால், அதிகம் மிரளவில்லை. இதனால் வீரர்கள் காயம்பட்டதும் குறைவு தான். மூன்று நாட்களிலும் 117 வீரர்கள் லேசான காயமடைந்தனர். இதில் 8 பேர் மட்டுமே, மேல்சிகிச்சைக்காக, மதுரை அரசு மருத்துவ
மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
கடந்தாண்டை விட, இந்தாண்டில் குறைந்தளவு வீரர்களே காயம்பட்டனர். அதிலும் ரத்தம் சிந்தாத, ரத்தம் ஏற்றாத ஜல்லிக்கட்டை, காவல்
துறையினர் வெற்றிகரமாக நடத்தி முடித்தனர், என்கின்றனர் டாக்டர்கள்.