தேடல்

ரத்த உறைவு காரணமாக ஹிலாரிக்கு சிகிச்சை

வாஷிங்டன்: அமெரிக்க வெளியுறவு அமைச்சர், ஹிலாரி கிளின்டன், ரத்த உறைவு காரணமாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டனின் மனைவியும், தற்போதைய வெளியுறவு அமைச்சருமான, ஹிலாரி கிளின்டன்,65, கடந்த மாதம், வயிற்று போக்கால் பாதிக்கப்பட்டார். இதற்கிடையே அவர் மயக்கமடைந்து விழுந்தார். இதன் காரணமாக அவருக்கு உடலில் அடிப்பட்டது.
அடிபட்டதால், அவர் உடலில் ரத்த உறைவு ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர், நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரத்த உறைவை தடுக்கும் சிகிக்சை அளிக்கப்பட்டு, அவரது உடல் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அடுத்த வாரம் ஹிலாரி பணிக்கு திரும்புவார், என எதிர்ப்பார்க்கப்படுகிறது.