தேடல்

தற்கொலை முடிவு வேண்டாம் :விவசாயி சங்கம் வேண்டுகோள்

புதுக்கோட்டை: பயிர்கள் கருகிவிட்டதற்காக, தற்கொலை செய்துகொள்ளும் முடிவை கைவிடவேண்டும் என, விவசாயிகளுக்கு, இந்திய விவசாயிகள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து இந்திய விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் தனபதி வெளியிட்டுள்ள அறிக்கை:பருவமழை பொய்த்துவிட்டதாலும், காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடகா மறுத்துவிட்டதாலும், டெல்டா பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா பயிர்கள் கருகி வருகிறது. இதனால் ஏற்படும் பாதிப்பை எதிர்கொள்ள முடியாமல், விவசாயிகள் விஷம் குடித்து தற்கொலை செய்கின்ற துயர சம்பவம் தொடர்கிறது.தற்கொலை செய்வதால் தமது குடும்பம் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்படும் என்பதை உணர்ந்து, இதுபோன்ற கோழைத்தனமான முடிவுகளை விவசாயிகள் கைவிட வேண்டும்.கருகிவிட்ட பயிர்களுக்கு மத்திய, மாநில அரசுகளிடமிருந்து உரிய இழப்பீடு பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும். ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தி விவசாயம் செய்வதை கைவிட்டு, இயற்கை விவசாயத்துக்கு திரும்பவேண்டும்.விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்காமல், இதன் உபதொழில்களாக உள்ள கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மரம் வளர்ப்பு, மீன் வளர்ப்பு போன்றவற்றில் ஈடுபடவேண்டும். வேளாண் துறையும் உபதொழில்கள் செய்ய விவசாயிகளை ஊக்குவிக்கவேண்டும்