தேடல்

"லஞ்சம் கொடுத்தால் தான் நடவடிக்கை' கண்டு கொள்ளாத அதிகாரிகள்: சிரமத்தில் மக்கள்

ஆவடி :ஆவடி உணவு பொருள் வழங்கல் துறை அலுவலகத்தில் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே, குடும்ப அட்டை தொடர்பான கோரிக்கைகள்
நிறைவேற்றப்படுவதாக, பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
பொது

வினியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும், அரிசி, சர்க்கரை உள்ளிட்ட

அத்தியாவசிய பொருட்களை பெற, உணவு பொருள் வழங்கல் துறையால் வழங்கப்படும்

குடும்ப அட்டை மிகவும் அவசியம். இதுதவிர, அரசின் நலத்திட்ட உதவிகளை

பெறவும்,
சலுகைகளை பெறவும் குடும்ப அட்டை இன்றியமையாதது.
குடும்ப அட்டை பெற, சென்னை
பகுதியில் உதவி ஆணையர் அலுவலகங்களிலும்,இதர மாவட்ட பகுதிகளில் வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆவடியில்

உணவு பொருள் வழங்கல் துறை உதவி ஆணையர் அலுவலகம் உள்ளது. இங்கு, குடும்ப

அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம், மண்டலம்

விட்டு மண்டலம் மாற்றம், மாவட்டம் விட்டு மாவட்டம் மாற்றம் உள்ளிட்ட

பல்வேறு கோரிக்கைகளுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து

செல்கின்றனர்.
ஒவ்வொரு மனு மீதும் நடவடிக்கை எடுக்க அரசால், கால

நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்த

போதும் கூட, லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கிறது. இல்லாவிட்டால், சாக்கு

போக்கு சொல்லி காலதாமதம் செய்கின்றனர்; உதவி ஆணையரும் இதை

கண்டுகொள்வதில்லை என, பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து

ஆவடியை சேர்ந்த ஒருவர் கூறுகையில்,தரகர்களை அணுக வேண்டாம் என, எழுதி

வைத்துவிட்டு, இவர்களே நேரடி வசூலில் ஈடுபடுகின்றனர். இதுகுறித்து

கேட்டால், யாரிடம் வேண்டுமானாலும் புகார் செய்யுங்கள் என, பணியாளர்கள்

அலட்சியமாக கூறுகின்றனர். இதுகுறித்து உணவு பொருள் வழங்கல் துறை உயர்

அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளை அணுகி, இதுகுறித்து கேட்ட போது அவர்கள் மழுப்பலான பதிலையே அளித்தனர்.