தேடல்

தில்லை காளியம்மனுக்குஅர்த்தஜாம சிறப்பு வழிபாடு

சிதம்பரம்:சிதம்பரம்

தில்லை காளியம்மன் கோவிலில் அர்த்தஜாம சிறப்பு வழிபாடு நடந்தது.இதனையொட்டி

கடந்த 11ம் தேதி அம்மனுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம், தைலக்காப்பு,

குங்குமப்பூ சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. பின்னர் அம்மன் வெண் பட்டு

உடுத்தி வெட்டிவேர், விலாமிச்சு வேர்களால் சிறப்பு அலங்காரத்தில்

பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.வழிபாட்டில், நடராஜன், ஜெயலட்சுமி

குருமூர்த்தி, அண்ணாமலை பல்கலைக் கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி

செந்தில்வேலன், பேராசிரியர் சின்னையன், அருள் கார்த்திகேயன், சரவணன்,

தொலைத்தூர கல்வி இயக்குனரகம் கிருஷ்ணகுமார், நவமணி, வைத்தியநாதசாமி,

சீனிவாசன், ராமமூர்த்தி, சக்திவேல், சுப்ரமணியன், கணேசன் உட்பட ஏராளமான

பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசனம் செய்தனர்.