தேடல்

தலைவர் பதவிக்கு ஸ்டாலின் பெயரை முன்மொழிந்தால் என்ன தவறு: கருணாநிதி

சென்னை: தி.மு.க., தலைவர் பதவிக்கு ஸ்டாலின் பெயரை முன்மொழிந்தால் என்ன தவறு என தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள தி.மு.க., தலைமை அலுவலகத்தில், வேலூர் மேற்கு மாவட்ட, பா.ம.க., செயலர் சாமுவேல் செல்லபாண்டியன் தலைமையில், 2,000 பேர், அக்கட்சியிலிருந்து விலகி, தி.மு.க.,வில் இணைந்தனர். இந்த விழாவில் பேசிய கருணாநிதி, அடுத்த தலைவர் யார் என்பதை வெளிப்படையாக அறிவித்தார்.

விழாவில், கருணாநிதி பேசும் போது, இந்த சமுதாய மேன்மைக்காக, எழுச்சிக்காக, என் ஆயுள் இருக்கிற வரை பாடுபடுவேன். அப்படியானால், அதற்கு பின் என்ற கேள்விக்குப் பதில், இங்கே அமர்ந்திருக்கிற ஸ்டாலின் என்பதை, நீங்கள் மறந்து விடக் கூடாது, என கூறினார். இது அழகிரி ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதற்கு, பதிலடி கொடுக்கும் வகையில், மத்திய அமைச்சர் அழகிரி, தி.மு.க., ஒன்றும் சங்கரமடம் அல்ல என, கருணாநிதி பாணியில்,ஆவேசமாக பேட்டி அளித்தார்.

ஆனால் இது குறித்து தி.மு.க. எம்.பி.யான கனிமொழி பின்னர் டி.வி. சானல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தி.மு.க.தலைவராக வாழ்நாள் முழுவதும் இருக்கப்போவதாக கருணாநிதி அறிவித்துள்ளார். அதன்பின்னர் ஸ்டாலின் அப்பொறுப்பை ஏற்பார் என கூறினார். அந்த வகையில் கட்சியின் தலைவராக ஸ்டாலின் வருவதில், அவருடைய தங்கை என்ற முறையில் மகிழ்ச்சி அடைகிறேன். நாங்கள் எப்போதும் ஒற்றுமையாக உள்ளோம். வரப்போகும் லோக்சபா தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறும் என கனிமொழி கூறினார்.

இந்த நிலையில் தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடந்தது. இந்தகூட்டத்தில் 4தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், திருவள்ளுவர் சிலையை பராமரிக்காததை கண்டித்து வரும் 19ம் தேதிஅன்பழகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்துவார் எனமுடிவு செய்யப்பட்டது.மேலும் தி.மு.க., ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கட்டடங்களை பராமரிக்காத அ.தி.மு.க, அரசுக்கு கண்டனம் நிறைவேற்றப்பட்டது.கடுமையான மின்வெட்டால்கோவையில் பல ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு குண்டர் சட்டம் பயன்படுத்தக்கூடாது. தனக்கு பிடிக்காதவர்கள் மீது குண்டர் சட்டம் போடப்படுகிறது.பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களின் மருத்துவ செலவை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதன் பின்னர் கருணாநிதி பத்திரிகையாளர்களுக்குபேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்,வாய்ப்பு கிடைத்தால் தி.மு.க, தலைவர் பதவிக்கு ஸ்டாலின் பெயரை முன்மொழிவேன். ஏற்கனவேஸ்டாலின் பெயரை அன்பழகன் முன்மொழிந்துள்ளார். அதனை வழி‌மொழிந்துதலைவர் பதவிக்கு ஸ்டாலின்பெயரை முன்மொழிந்தால் என்ன தவறு என கேள்வி எழுப்பினார்.முன்னதாக இக்கூட்டத்தில்மத்திய அமைச்சர் மு.க. அழகிரி புறக்கணித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.