தேடல்

தாழ்த்தப்பட்டோர் நல மாநில ஆணையம் தேவை

சென்னை:தாழ்த்தப்பட்டோர் நல மாநில ஆணையம் அமைக்க, முதல்வர் ஜெயலலிதா முன்வர வேண்டும், என, குடியரசு கட்சி எம்.எல்.ஏ., தமிழரசன் வலியுறுத்தினார்.
சட்டசபையில், அவர் பேசியதாவது:
தேசிய அளவில், தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் இயங்கி வருகிறது. இதேபோன்ற ஒரு ஆணையத்தை, தமிழக அளவில் அமைப்பதற்கு, முதல்வர் முன்வர வேண்டும். கேரளா, மகாராஷ்டிரா, உ.பி., - ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில், மாநில அளவில், இந்த ஆணையங்கள் இயங்கி வருகின்றன.
தர்மபுரி கலவரங்களை, தேசிய ஆணையத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள், நேரில் வந்து பார்வையிட்டுச் சென்றனர். மாநில அளவில், ஒரு ஆணையம் இருந்தால், உடனடியாக, சம்பவ இடத்திற்குச் சென்று, சேத விவரங்களை ஆய்வு செய்து, விரைந்து நடவடிக்கை எடுக்க வசதியாக இருக்கும்.
பறை இசையை, பல ஆண்டுகளாக, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இசைத்து வரு கின்றனர். இத்தொழிலை, பரம்பரை, பரம்பரையாக, ஏராளமானோர் செய்து வருகின்றனர்.
பல்வேறு தொழில்களுக்கு, நல வாரியங்கள் இருக்கின்றன. அதேபோல், பறை இசை கலைஞர்களுக்கு என, தனி நல வாரியத்தை அமைக்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, தமிழரசன் பேசினார்.