தேடல்

"தொழில் முனைவதற்கான மையங்களை கல்லூரிகளில் உருவாக்க வேண்டும்'

சென்னை : பொறியியல், கலை மற்றும் அறிவியல்

கல்லூரிகளில், மத்திய அரசு உதவியுடன், தொழில் முனைவதற்கான மையங்கள்

அமைக்கப்பட வேண்டும் என, அரசு செயலர் தனவேல் தெரிவித்தார். உயர் கல்வி

நிறுவனங்களில் பயிலும் மாணவர்களிடம், தொழில் முனைவதற்கான எண்ணத்தை

உருவாக்கும் பொருட்டு, தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு

திறன் மேம்பாட்டு இயக்கம் ஆகிய நிறுவனங்களுடன் சேர்ந்து, மாநில அளவிலான

கருத்தரங்கு, சென்னை வர்த்தக மையத்தில், சமீபத்தில் நடந்தது.
கருத்தரங்கை, உயர்கல்வி துறை அமைச்சர் பழனியப்பன், ஊரகமற்றும் தொழில்துறை அமைச்சர் மோகன், துவக்கி வைத்தனர் கருத்தரங்கு குறித்து, தமிழக சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்துறை செயலர் தனவேல் பேசியதாவது: தமிழக தொழில் துறையில், ஏழு லட்சம் பதிவு பெற்ற நிறுவனங்கள் உள்ளன.இதன் மூலம், 50 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். தமிழகத்தில் செயல்படும் பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், மத்திய அரசின் உதவியோடு, தொழில் முனைவதற்கான மையங்கள் அமைக்கப்பட வேண்டும்.
இதன் மூலம், ஒரு தொழில் வளர்ச்சி மாற்றத்தை உருவாக்கமுடியும். அதற்கு இந்த கருத்தரங்கம் பயனுள்ளதாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.