தேடல்

தொழிலாளர்களுக்கு பி.எப்., பிடித்தம் செய்யாவிட்டால் : சட்டப்பூர்வ நடவடிக்கை பாயும்

திருநெல்வேலி

: ஒப்பந்தத்தொழிலாளர்களுக்கு பி.எப்., பிடித்தம் செய்யப்படாவிட்டால்

முதன்மை வேலையளிப்பவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என

நெல்லையில் நடந்த கருத்தரங்கில் மதுரை மண்டல பி.எப்.கமிஷனர் விஜயக்குமார்

தெரிவித்தார். நெல்லை தொழிலாளர் வருங்கால வைப்புநிதி துணை மண்டல அலுவலகம்

சார்பில் முதன்மை வேலை அளிப்பவர்களுக்கான கடமைகள், பொறுப்புகள் என்ற

தலைப்பில் நேற்று கருத்தரங்கு நடந்தது.
மதுரை மண்டல பி.எப்.கமிஷனர் - 1 விஜயக்குமார் தலைமை வகித்து பேசியதாவது:
தொழிலாளர்கள்

நலன் கருதியும், அவர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்கும் நோக்கத்திலும்

பி.எப்.சட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஒப்பந்தத்தொழிலாளர்கள்

பி.எப்.சட்டம் மூலம் பயன் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
முதன்மை

வேலைஅளிப்பவர்கள் தங்கள் நிறுவனத்தில் ஒப்பந்ததாரர்கள் மூலம் பணிகளை

மேற்கொள்ளும் போது தொழிலாளர்கள் பி.எப்.சட்டம் மூலம் பயன் பெற நடவடிக்கை

எடுக்க வேண்டும். ஒப்பந்ததாரர்கள் மூலம் பணியாற்றும் தொழிலாளர்கள் பி.எப்.,

சட்டத்திற்குள் வருகின்றனரா என முதன்மை வேலைஅளிப்பவர்

உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இதில் ஒப்பந்ததாரர்கள் தவறு செய்தாலும்

அதற்கான பொறுப்பை முதன்மை வேலையளிப்பவரே ஏற்க நேரிடும்.
பணிக்காலத்தில்

தொழிலாளர்கள் விபத்தில் சிக்க நேரிட்டால் அவர்கள் பி.எப்.சட்டத்தில்

சேர்க்கப்பட்டனரா என விசாரணை மேற்கொள்ளப்படும். இல்லையெனில், சம்பந்தப்பட்ட

முதன்மை வேலையளிப்பவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். தங்கள்

நிறுவனத்தில் ஒப்பந்தப்பணிகளை மேற்கொள்பவர்களின் பட்டியலை முதன்மை

வேலையளிப்பவர்கள் பி.எப். அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.
நிறுவனங்களின்

ஆவணங்களை பார்வையிடுவது, நிறுவனங்களின் அசையும், அசையா சொத்துக்களை

கைப்பற்றுவது, தேவைப்பட்டால் வாரன்ட் இன்றி கைது செய்வது உள்ளிட்ட

அதிகாரங்கள் பி.எப்., துறைக்கு உள்ளன. இவ்வளவு அதிகாரங்கள் இருந்தும்

நிறுவனங்களில் சட்டத்தை அமல்படுத்துவதில் தயங்குவது ஏன் சுப்ரீம் கோர்ட்

கேள்வி எழுப்பியுள்ளது. தொழிலாளர்களை பாதுகாக்க பி.எப்.சட்டத்தை அமல்படுத்த

தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு கமிஷனர் விஜயக்குமார் பேசினார்.
நெல்லை

துணை மண்டல அலுவலக பி.எப்.கமிஷனர் - 2 சவுரப்சுவாமி பேசிய போது, பி.எப்.

சந்தாத்தொகையை உடனுக்குடன் செலுத்தி நிறுவனங்கள் ஒத்துழைக்க வேண்டும்.

சட்டத்திற்கு உட்படாத நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்புதல், நீதிமன்ற

நடவடிக்கை உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
வேலையளிப்பவர்கள்

தொழிலாளி வேலைக்கு சேர்ந்த நாள் முதல் பி.எப்.,சட்டத்தில் பயன் பெற

நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தொழிலாளி முன்பு பணியாற்றிய இடத்தில்

பி.எப்., சட்டத்தில் சேர்க்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்.
ஒப்பந்ததாரர்

பி.எப்.,கோடு எண் வைத்துள்ளாரா என முதன்மை வேலையளிப்பவர் கண்காணிக்க

வேண்டும். இல்லையெனில், நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யும் முன்பு பி.எப்.

கோடு எண் பெறும்படி ஒப்பந்ததாரரை அறிவுறுத்த வேண்டும். என்றார்.
உதவி

கமிஷனர் ஷேக்சிந்தா வரவேற்றார். கணக்கு அலுவலர் ராஜேந்திர பிரசாத்

பவர்பாயின்ட் விளக்கவுரை ஆற்றினார். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை

சேர்ந்த மாநகராட்சி, நகராட்சி அலுவலர்கள், டாஸ்மாக், ஐ.எஸ்.ஆர்.ஓ.,

கூடன்குளம் அணு மின்நிலையம், இதர நிறுவன அலுவலர்கள் பங்கேற்றனர்.

கலந்துரையாடல் நடந்தது.
உதவி கமிஷனர் மோகனன் நன்றி கூறினார்.