தேடல்

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை

சென்னை:தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்று, சில
இடங்களில் மழை பெய்யும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில், புதிதாக குறைந்த
காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாகவும், அது, சென்னையில் இருந்து, ஆயிரம் கி.மீ., தொலைவுக்கு
அப்பால் நிலை கொண்டுள்ளதாகவும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய
அதிகாரி ஒருவர் கூறுகையில், அடுத்த இரண்டு நாட்களுக்கு, அரியலூர், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம்,
தஞ்சாவூர், திருப்பூர் ஆகிய இடங்களில் மழை பெய்யக்
கூடும். சென்னை நகரில் வானம் மேகமூட்டமாக காணப்
படும். நகரின் சில இடங்களில், மழை பெய்ய வாய்ப்பு உள்ளது, என்றார்.