தேடல்

வடக்கநந்தல் கோவிலில்கும்பாபிஷேக விழா

கச்சிராயபாளையம்:கச்சிராயபாளையம்

அடுத்த வடக்கநந்தலில் உள்ள மாரியம்மன், பிடாரி அம்மன், அங்காள பரமேஸ்வரி

கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
விழாவையொட்டி நேற்று முன்தினம்

கணபதி பூஜை, கோ பூஜை, தன பூஜை, பிரவேச பலி, வாஸ்து சாந்தியும் நடந்தது.

இரவு 9 மணி முதல் 12 மணி வரை பிம்ப ஸ்தாபனமும் நடந்தது.நேற்று அதிகாலை 5

மணிக்கு கணபதிபூஜை, புண்யாவாஹனம், சூர்ய பூஜையும், காலை 6 மணிக்கு இரண்டாம்

கால யாகம் துவங்கியது.காலை 9 மணிக்கு மாரியம்மன் மற்றும் பிடாரி

அம்மனுக்கும்,காலை 10 மணிக்கு அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கும்

கும்பாபிஷேகம் நடந்தது.