தேடல்

வன விலங்கு பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

வில்லியனூர்:வனத்துறை சார்பில் வன விலங்கு பாதுகாப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி வில்லியனூர் பகுதியில் நடந்தது. பேரணியை வனத்துறை இணை இயக்குனர் சிவராமன் துவக்கி வைத்தார். வன விலங்கு பாதுகாப்பு மற்றும் மரம் வளர்ப்பு குறித்து துண்டு பிரசுரங்களை துறை ஊழியர்கள் மக்களுக்கு வழங்கினர்.ஒதியம்பட்டு ரோடு வழியாக கணுவாப்பேட்டை, கோட்டைமேடு, மாட வீதிகளைச் சுற்றி பத்துக்கண்ணு சாலை வழியாக ஊசுட்டேரியை அடைந்தனர். ஊசுட்டேரியின் கரை பகுதியில் நூற்றுக்கணக்கான மரக்கன்றுகளை நட்டனர்.