தேடல்

தவறி விழுந்து குழந்தை பலி

திருவண்ணாமலை: விளையாடிக்கொண்டிருந்த போது, தவறி விழுந்த குழந்தை பலியானது. ஆரணி அடுத்த மட்டதாரியை சேர்ந்தவர் விவசாயி பெரியசாமி. இவரது மகன் குமார், 3.கடந்த இரு தினங்களுக்கு முன் வீட்டின் வெளியே உள்ள திண்ணை மீது விளையாடிக்கொண்டிருந்த பிரவீன்குமார் திடீரென தலைகீழாக கீழே விழுந்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில்சிகிச்சை பலனின்றி பரிதாபமாகபிரவீன்குமார் இறந்தார். ஆரணி தாலுகாபோலீஸார் விசாரித்து வருகின்றனர்.