தேடல்

விஜயகாந்த் மனு தள்ளுபடி

சென்னை: ரிஷிவந்தியம் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், விஜயகாந்த் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. ரிஷிவந்தியம் தொகுதியில் தே.மு.க., தலைவர் விஜயகாந்த் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி, ஜெயந்தி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்நிலையில், விஜயகாந்த் சார்பில் இவ்வழக்கில் காலதாமதமாக மனுத்தாக்கல் செய்ததை ஏற்கவேண்டும். தேர்தல் அதிகாரி மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நீக்க வேண்டும் என இரு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றில் முதலாவது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இரண்டாவது கோரிக்கையை நிராகரித்தனர்.