தேடல்

வாட்சன் சதம் * வெ. இண்டீசுக்கு 330 ரன்கள் இலக்கு

கேன்பெரா:வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வாட்சன் சதம் அடித்து அசத்த, ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 329 ரன்கள் குவித்தது.ஆஸ்திரேலியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, ஐந்து ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கிறது. முதல் இரண்டு போட்டியிலும், ஆஸ்திரேலியா வென்றது. மூன்றாவது ஒருநாள் போட்டி கேன்பெராவில் நடக்கிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் கிளார்க் பேட்டிங் தேர்வு செய்தார்.ஹியுஸ் அபாரம்:ஆஸ்திரேலிய அணிக்கு வாட்சன், பின்ச் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. பின்ச் (38) சமி வேகத்தில் வெளியேறினார். கேப்டன் கிளார்க் (15) நிலைக்கவில்லை. மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வாட்சன் (122, 12 பவுண்டரி 2 சிக்சர்) ஒருநாள் அரங்கில் 7வது சதத்தை பதிவு செய்தார். இவருக்கு நல்ல கம்பெனி கொடுத்த ஹியுஸ் (86) அரைசதம் கடந்தார். அடுத்த வந்த பெய்லியும் (44) அதிரடியில் மிரட்ட ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. மேக்ஸ்வெல் (4) போலார்டுன் சூப்பர் கேட்ச் மூலம் வெளியேறினார். 50 ஓவர் முடிவில், ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுக்கு 329 ரன்கள் குவித்தது.வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சமி, நரைன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.