தேடல்

வீட்டின் கதவை உடைத்து 70 சவரன் நகைகள் திருட்டு:சைக்கிளில் தப்பிய வாலிபர் பிடிபட்டார்

சென்னை : ராயப்பேட்டையில்,

வீட்டின் கதவை உடைத்து, 70 சவரன் நகைகள், ஒன்றரை லட்சம் பணம்

திருடியவர்களில், ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும், மூன்று பேரை

போலீசார் தேடி வருகின்றனர்.
ராயப்பேட்டை வி.எம்., கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில், முதல் மாடி யில் வசிப்பவர்கணபதி, 30; வீடியோகிராபர்.
இவரது

மனைவி ஜெயந்தி,28. பிராட்வே பகுதியில் நடைபெறும் கோவில் விழாவை படம்

பிடிக்க, கணபதி ஒப்பந்தம் செய்திருந்தார். வீட்டுக்கு வந்து செல்ல முடியாத

நிலை இருந்ததால், வடபழனியில் உள்ள மாமனார் வீட்டுக்கு, மனைவியை அனுப்பி

வைத்தார்.
சைக்கிளில்...
நேற்று அதிகாலை, 3:30 மணிக்கு, நண்பர்

பாலாஜியுடன், மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்த போது, பால்கனியில்

இருந்து குதித்து, ஒரு வாலிபர் சைக்கிளில் ஏறி வேகமாக சென்றார். சந்தேகம்

அடைந்த கணபதி, அவரை விட்டிச்சென்றார்.
ராயப்பேட்டை மருத்துவமனை பிணவறை

அருகே சென்றபோது, வாலிபர் சென்ற சைக்கிளின் செயின் அறுந்தது. இதையடுத்து,

அந்தவாலிபரை, கணபதி, பாலாஜி ஆகியோர் மடக்கி பிடித்து, ராயப்பேட்டை

போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள், இது தங்கள் எல்லை கிடையாது என, கூறவே ஐஸ்ஹவுஸ் போலீசில் அந்த வாலிபரை ஒப்படைத்தனர்.
பின்னர்,

வீட்டுக்கு வந்து பார்த்தபோது, கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த, 70

சவரன் நகைகள், ஒன்றரை லட்சம் ரூபாய் திருட்டுபோயிருந்தது தெரிந்தது.

இதுகுறித்து, ஐஸ்ஹவுஸ் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பிடிபட்ட

வாலிபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த

சம்பத், 30, என்பதும், வீட்டில் ஆள் இல்லாததை தெரிந்து, நண்பர்கள் மூன்று

பேருடன் சேர்ந்து திருடியதை ஒப்புக்கொண்டார். அவர்கள் தப்பி

ஓடிவிட்டதாகவும் அவர்களிடம் தான், நகை, பணம் உள்ளது எனவும் அந்த வாலிபர்

தெரிவித்து உள்ளார்.
வெட்ட வருகின்றனர்
சைக்கிளில் தப்பிச் சென்ற

வாலிபரை, கணபதியும், அவரது நண்பர் பாலாஜியும் மோட்டார் சைக்கிளில்

விரட்டிச்சென்றபோது, என்னை கொல்ல வருகின் றனர். காப்பாத்துங்க,

காப்பாத்துங்க என, கத்தியபடியே சென்றுள்ளார்.
ராயப்பேட்டை மருத்துவமனை

அருகே சிக்கியபோது, என்னை கொலை செய்ய மூன்று பேர் விரட்டி வந்தனர்.

அதனால், தான் கத்தியபடியே வந்தேன், நீங்கள் இல்லைஎன, நைசாக பேசி, நழுவ

முயன்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.இருப்பினும், சமயோசிதமாக செயல்பட்டு, அந்த வாலிபரை போலீசில் ஒப்படைத்துள்ளனர்.