தேடல்

வினோத நோயின் விபரீதம் அமெரிக்க பெண் தற்கொலை

வாஷிங்டன்:அமெரிக்காவை சேர்ந்த ஒரு பெண், வினோத செக்ஸ் நோயின் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்.அமெரிக்காவின் புளோரிடாவை சேர்ந்தவர் கிரெட்சென் மொலானென், 39. இளம் வயதில், ஒரு விபத்தில் சிக்கிய பிறகு அவரது உடலில் சில மாற்றங்கள் ஏற்பட்டன. அதன் பிறகு ஒரு நாளைக்கு, 50 முறையாவது உடலுறவில் உச்சநிலை அடையும் வேட்கை, அவருக்கு தோன்றியது. இந்த பிரச்னையால் அவர், 16 ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தார்.

இதற்காக, சில நண்பர்களின் உதவியையும், மருத்துவர்களின் உதவியையும் நாடினார். இருப் பினும் மருத்துவர்களும், இந்த நோய்க்கு சிகிச்சையில்லை என, கூறி விட்டனர். சாதாரண மாக ஒருவர் லேசாக உரசி விட்டாலோ,இடுப்பை அசைத்தாலோ,அதனால்,இவருக்கு உடலுற வின் உச்ச நிலை வேட்கை ஏற்பட்டு விடும். ஒரு நாளைக்கு, 50 முறைக்கு மேல் இது போன்ற பாதிப்பை இவர் உணர்ந்ததால், வேறு எந்த வேலையையும் செய்ய முடியவில்லை.இனியும் இதுபோன்ற கொடுமையை அனுபவிக்க விரும்பவில்லை என, ஒரு டிவிக்கு பேட்டி கொடுத்த இந்த பெண், மறுநாளே தற்கொலை செய்து கொண்டார்.