தேடல்

விபத்துக்கு காரணமான "லாஞ்சிங் கர்டர்' இயந்திரம் அகற்றம்

ஆலந்தூர் : ஆலந்தூரில், மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின் போது, சரிந்து விழுந்த, பிரமாண்ட, லாஞ்சிங் கர்டர் இயந்திரம் அகற்றப்பட்டது.சென்னை

மெட்ரோ ரயில் திட்டத்தில், சென்னை கோயம்பேடு - பரங்கிமலை இடையே, மேம்பாலம்

அமைக்கப்பட்டு, அதன் மீது, தண்டவாளம் அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணியில்,

ஆலந்தூரில் இருந்து, பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையம் வரை, சிமென்ட்

தூண்கள் அமைக்கப்பட்டு, அதன் மீது, செக்மென்ட்கள் கொண்டு, மேம்பாலம்

அமைக்கும் பணி நடக்கிறது. இந்த, செக்மென்ட்கள், 400 டன் எடை கொண்ட,

லாஞ்சிங் கர்டர் இயந்திரம் மூலம், இரண்டு தூண்டுகளுக்கு இடையே, 23 மீ.,

உயரத்தில் மேம்பாலமாக அமைக்கப்படுகிறது.கடந்த, 10ம் தேதி, இப்பணிக்காக, லாஞ்சிங் கர்டர் இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. அப்போது, அந்த இயந்திரம் சரிந்ததால், அதன் மீதிருந்த,
செக்மென்ட்களும் கீழே விழுந்தன. இந்த விபத்தில், பீகாரை சேர்ந்த டிம்பிள் ஷா, 28,
இறந்தார். மேலும், மூன்று பேர் காயமடைந்தனர்.விபத்துக்கு

காரணமான, லாஞ்சிங் கர்டர் இயந்திரத்தை மீட்க, 80 டன் எடை கொண்ட மூன்று

ராட்சத கிரேன்கள், 25 பொறியாளர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள்

ஈடுபட்டு, இயந்திரத்தை, நேற்று முன்தினம் அகற்றினர்.
இதற்காக, ஆலந்தூரில் இருந்து பரங்கிமலை, ஆதம்பாக்கம் செல்லும் சாலையில், இரண்டு நாட்களாக, போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தது.இது குறித்து, மெட்ரோ பொறியாளர் ஒருவர் கூறியதாவது: லாஞ்சிங் கர்டர் இயந்திரம் விழுந்த போது, சில தூண்கள் சேதமடைந்தன. அந்த தூண்களின் வலிமையை ஆராய்ந்து, அதற்கு மேல் மேம்பாலம் அமைக்கப்படும்.
இன்னும் சில நாட்களில், வேறு ஒரு,லாஞ்சிங் கர்டர் இயந்திரம் கொண்டு வரப்பட்டு, பணிகள் தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.