தேடல்

விமலுக்கு சிபாரிசு செய்த விஜயசேதுபதி

களவாணி விமலும், பீட்சா விஜயசேதுபதியும் கூத்துப்பட்டறையில் நடிப்புப் பயிற்சி எடுத்தவர்கள். அந்தசமயத்தில், பசங்க படத்தில் நடிக்க, ஒரு நல்ல புதுமுக நடிகர் வேண்டும் என்று, டைரக்டர் பாண்டிராஜ் அவர்களை தொடர்பு கொண்டாராம். அப்போது, பசங்க படத்தின் கதையை கேட்ட விஜயசேதுபதி, இந்த கதைக்கு விமல்தான் பொருத்தமாக இருப்பார் என்று, அவரை டைரக்டர் பாண்டிராஜிடம் அறிமுகம் செய்து வைத்தாராம். இந்த தகவலை, விஜயசேதுபதி நடித்துள்ள, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின், 50வது நாள் விழாவில் கலந்து கொண்ட, விமல் மேடையில் பேசும் போது தெரிவித்தார்.