தேடல்

விமான விபத்தில் 21 பேர் பலி

அல்மாட்டி:கஜகஸ்தான் நாட்டில் அதிக பனி காரணமாக தனியாருக்கு சொந்தமான விமானம் விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 21 பேர் பலியாயினர்.இது குறித்து அந்நாட்டின் அதிகாரி ஒருவர் கூறுகையில்‌கஜகஸ்தானில் உள்ள அல்மாட்டி நகரின் அருகேஇவ்விபத்து ஏற்பட்டுள்ளது.அதிக பனி காரணமாக விமானத்தில் பயணம் செய்த16 பயணிகள் மற்றும்5 விமான ஊழியர்கள்பலியாயினர். அளவிற்கு அதிகமான பனி பொழிந்த காரணத்தால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகவும்,விமானத்தில் தீ விபத்தது மற்றும் வெடித்து சிதறியதற்கான தடயங்கள் எதுவும் கிடைக்க வில்லை என கூறினார்.மேலும் அல்மாட்டி நகர துணை மேயர் மவுலன் முகாஸேவ் கூறுகை‌யில் முதல்கட்ட தகவலின் படிமோசமான வானிலை காரணமாகஇவ்விபத்து நடைபற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.