தேடல்

வாலு படம் வந்தால் நான் கனவுக்கன்னியாகி விடுவேன்- ஹன்சிகா!

ஒரு கல் ஒரு கண்ணாடி படம் கொடுத்த ஹிட் காரணமாக அரை டஜன் படங்கள் ஹன்சிகாவின் பாக்கெட்டில் எகிறி குதித்தன. அதனால் பிசி நடிகையாகி விட்டார். இருப்பினும் அவர் நடித்த படங்களில் வேறு கதாநாயகிகளும் இருப்பதால் தன்னை எந்த அளவுக்கு இயக்குனர்கள் வெளிப்படுத்தப்போகிறார்களோ என்ற அச்சம் ஒரு பக்கம் அவருக்கு இருக்கிறது. ஆனால் சிம்புவுடன் நடித்துள்ள வாலு படத்தில் ஹன்சிகா மட்டுமே சிங்கிள் ஹீரோயினி. அதனால் அந்த படத்தின் எனது ஆளுமை அதிகமாக உள்ளது என்கிறார்.

மேலும், வாலு படத்தைப்பொறுத்தவரை எனது அடுத்த சூப்பர் ஹிட் படம் என்று இப்போதே அடிச்சு சொல்வேன். அந்த அளவுக்கு இன்றைக்கு தியேட்டர்களுக்கு படம் பார்க்க வரும் இளைஞர்களின் பேவரிட் பிலிமாக இது இருக்கும். குறிப்பாக, காதலர்களுக்கு இப்படத்தில் நல்ல மெசேஜ் உள்ளது. படம் பார்க்கும் ரசிகர்கள் அவர்களது காதலி தங்களுடன் எப்படி ஜாலியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ அப்படி நான் நடித்திருக்கிறேன். அதனால் இந்த படத்துக்குப்பிறகு நான் இளவட்ட ரசிகர்களின் கனவுக்கன்னியாகி விடுவேன் என்று சொல்லும் ஹன்சிகா, இனி முடிந்தவரை காதல் சம்பந்தப்பட்ட கதைகளுக்கு முதலிடம் கொடுத்து நடிப்பேன் என்கிறார்.