தேடல்

வேளாண் வங்கிகளுக்கு மானியம்: முதல்வர்

சென்னை: தொடக்க கூட்டுறவு வேளாண் வங்கிகளுக்கு மானியத்தை விடுவித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில்,மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் நிதிநிலையை சரி செய்ய கடந்த ஆண்டு மானியமாக ரூ.82 கோடியே 54லட்சத்து 57 ஆயிரத்து 662விடுவித்துமுதல்வர் உத்தரவிட்டிருந்தார். இந்த ஆண்டு 23 தகுதியுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கும், 4 மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கும், அரசு மானியமாக ரூ.72 கோடியே 8 லட்சத்து52 ஆயிரத்து 310விடுவித்துசெய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.