தேடல்

விஷம் குடித்து விவசாயி தற்கொலை

திருத்துறைப்பூண்டி: காவிரியில் தண்ணீர் வராததால் பயிர்கள் கருகுவதைக் கண்டு மனம் நொந்த விவசாயி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா ஆந்தாங்கரைப் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ரகீம் (42). விவசாயியான இவர் காவிரியில் தண்ணீர் வராததால் பயிர்கள் கருகுவதைக் கண்டு கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்தார். இந்நிலையில், இன்று அவர் விஷம் குடித்தார். விஷம் குடித்த அப்துல் ரஹூம் பின்னர் மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து ஆழிவலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.