தேடல்

ஷெட்டர் அரசு பட்ஜெட் தாக்கல் செய்யுமா? எடியூரப்பா சந்தேகம்

பெங்களூரு:கர்நாடக முதல்வர் ஷெட்டர் தலைமையிலான அரசு இந்தஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யுமா என்பது பற்றி எனக்கு தெரியாது என கர்நாடக ஜனதா கட்சி தலைவர் எடியூரப்பா கூறியுள்ளார். ஷெட்டர் அரசு பட்ஜெட் தாக்கல் செய்வது பற்றி கடவுளுக்குமட்டுமே தெரியும் என கூறினார்.திட்டமிடப்பட்ட மற்றும் திட்டமிடாத செலவுகள் பற்றி மாநில அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மாநில அரசு பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதில்லை. ஆனால் விளம்பரங்களுக்கு மட்டும் பணம் செலவு செய்கிறது என கூறினார்.