தேடல்

ஸ்ரீவி.,ஆண்டாள் கோயிலில் நாளை பரம பத வாசல் திறப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர்:வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நாளை (டிச.,24) காலை, பரம பத வாசல் திறப்பு நடக்கிறது. ஸ்ரீவி., கோயிலில் பகல்பத்து உற்சவம், கடந்த 14ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. தினம் ஆண்டாள், ரெங்கமன்னார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு, பகல்பத்து மண்டபத்தில் எழுந்தருளல் , அரையர் சேவை, கோஷ்டி, பெரிய பெருமாள் பக்தி உலாவுதல் போன்றவை நடக்கிறது.இதனிடையே நாளை (டிச.,24) ராப்பத்து உற்சவம் துவங்குகிறது. விழாவின் முதல்நாளான நாளை, வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, காலை 7.05 மணிக்கு, பரம பத வாசல் திறப்பு நடக்கிறது.இதையொட்டி, காலை ஆண்டாள், ரெங்கமன்னார் ,பெரிய பெருமாள் பல்லக்கில் மூலஸ்தானத்தில் புறப்பட்டு, பரம பத வாசல் வழியாக, ராப்பத்து மண்டபம் வருதல் நடக்கிறது. பின் திருவாய்மொழி துவக்கம், அரையர் வியாக்கியானம், மாலையில் ஆண்டாள், ரெங்கமன்னார் புறப்பட்டுமீண்டும் மூலஸ்தானம் வந்தடைதல் நடக்கிறது. ராப்பத்து உற்சவத்தின் 2ம் நாள் முதல், 10ம் விழா வரை, தினமும் மாலை 5 மணிக்கு பரம பத வாசல் திறந்திருக்கும் .
ஏற்பாடுகளை, தக்கார் ரவிச்சந்திரன், கோயில் செயல் அலுவலர் சுப்பிரமணியன் உட்பட ஊழியர்கள் செய்துள்ளனர்.