தேடல்

ஹிட்டுக்காக காத்திருக்கிறேன்!

தனித்துவமிக்க பாடல்களாலும், கவிதைகளாலும், தலைமுறை தாண்டி பேசப் படுபவர், தேசியக் கவி சுப்ரமணிய பாரதியார். அவரின் எள்ளு பேரன் நிரஞ்சன் பாரதி. யுவன் இசையில் மங்காத்தா படத்தில் அறிமுகமானார். நீண்ட இடைவேளைக்கு பின், பாகன் படத்திற்கு பாட்டு எழுதினார். பாரதியார் குடும்பத்தை சேர்ந்த உங்களுக்கு, திரைப்படங்களில் போதிய வாய்ப்பு கிடைக்காதது ஏன் என, கேட்டபோது, இப்போது பாடலாசிரியரை முடிவு செய்வது இசைஅமைப்பாளர்கள் அல்ல; இயக்குனர்கள் தான். சில இயக்குனர்களை சந்தித்து பேசி வருகிறேன். ஒரு பெரிய ஹிட் கொடுத்தால் அதற்கு பின், தொடர்ச்சியாக வாய்ப்பு வரும். அந்த ஒரு ஹிட் பாட்டிற்காக தான் காத்திருக்கிறேன். நிச்சயம், என் குடும்ப பெயரை காப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது என்கிறார், நிரஞ்சன் பாரதி.