தேடல்

ஹியுஸ் சதம் * இலங்கைக்கு 248 ரன்கள் இலக்கு

ஹோபர்ட்: இலங்கை அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில், ஹியுஸ் சதம் அடித்து கைகொடுக்க ஆஸ்திரேலிய அணி, 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 247 ரன்கள் எடுத்தது.ஆஸ்திரேலியா சென்றுள்ள இலங்கை அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் நான்கு போட்டியின் முடிவில், இலங்கை 2-1 என முன்னிலை வகித்தது. ஐந்தாவது ஒருநாள் போட்டி ஹோபர்டில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற இலங்கை கேப்டன் ஜெயவர்தனா பீல்டிங் தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணியில் காயம் காரணமாக கேப்டன் கிளார்க்கு பதில் பெய்லி கேப்டன் பொறுப்பை ஏற்றார்.ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர் (10), வேட் (23) ஜோடி சுமாரான துவக்கம் தந்தது. கேப்டன் பெய்லி (17) நிலைக்கவில்லை. டேவிட் ஹசி (34) ஓரளவு கைகொடுத்தார். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஹியுஸ் ஒருநாள் அரங்கில் 2வது சதத்தை பதிவு செய்தார். மேக்ஸ்வெல் (9) ஏமாற்றினார். ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 247 ரன்கள் எடுத்தது ஹியுஸ் (138) அவுட்டாகாமல் இருந்தார்.இலங்கை அணிக்கு தில்ஷன், மலிங்கா, குலசேகரா, பெரேரா தலா ஒரு விக்கெட் சாய்த்தனர்.---