தேடல்

ஹீரோவாகும் புரோட்டா சூரி

சுசீந்திரன் இயக்கிய, வெண்ணிலா கபடி குழு படத்தில், காமெடியனாக அறிமுகமானவர் சூரி. அந்த படத்தில், இவர் நடித்த, புரோட்டா கடை காமெடி பிரபலமடைந்ததால், அதிலிருந்து புரோட்டா சூரி என்ற பெயரிலேயே, இவர் பிரபலமாகி விட்டார். அதன்பின், பல படங்களில் முக்கிய காமெடியனாக நடித்த சூரியை, ஹீரோவாக்கும் முயற்சிகளும் அவ்வப்போது நடந்து வந்தன. பிடி கொடுக்காமல் இருந்த அவர், தற்போது, மன்னாரு படத்தை தயாரித்த நிறுவனத்துக்கு, ஹீரோவாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். முதலில், அவர்கள் அழைத்த போது, ஹீரோ வேஷமெல்லாம் வேண்டாம்; புரோட்டா மாஸ்டராகவே இருந்துவிட்டு போறேன் என்று மறுத்த சூரியிடம், முழுக்கதையும் சொன்ன பின், எனக்கேற்ற கதை தான் என்று ஒத்துக் கொண்டாராம். இதையடுத்து, அவருக்கு ஜோடி தேடும் பணிகள் மும்முரமாக நடக்கின்றன.