தேடல்

ஹாலிவுட் நடிகை எமிக்கு தமிழ் மீது திடீர் பாசம்!

மதராசபட்டணம் படத்தின் மூலம், ஹாலிவுட்டிலிருந்து, கோலிவுட்டுக்கு இறக்குமதியான, எமி ஜாக்சன், அதன் பின், தமிழில், தாண்டவம் படத்தில் நடித்தார். இடையில், பாலிவுட்டுக்கும் படையெடுத்து, விண்ணை தாண்டி வருவாயா இந்தி ரீமேக்கில், ஹீரோயினாக நடித்தார். தற்போது, ஷங்கர் இயக்கும்,ஐ படத்தில், விக்ரமுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புக்காக சீனாவில், 45 நாட்கள் முகாமிட்டு நடித்தார், எமி. தற்போது, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு, சென்னையில் நடக்கிறது. இதில், விக்ரம் - எமி ஜாக்சன் நடிக்கும் காதல் காட்சிகள் படமாகிறதாம். எமி ஜாக்சனுக்கு இந்த படத்தில், அதிகமான வசனங்கள் உள்ளதாம். இதனால், தமிழ் வசனங்கள் அனைத்தையும், தன் தாய்மொழியான ஆங்கிலத்தில் எழுதி, அதை இரவு, பகலாக மனப்பாடம் செய்து வருகிறாராம். படப்பிடிப்புகளின் இடைவெளியில் கூட, அவர், தமிழில் முணு முணுத்தபடி வலம் வருவதை பார்த்து, படக் குழுவினர், ஆச்சர்யப்பட்டு போனார்களாம்.