தேடல்

த்ரிஷா தலையீட்டினால், சுனைனா சீன்களில் கைவைத்த விஷால்!

த்ரிஷாவுடன் டூயட் பாட வேண்டும் என்பது விஷாலின் நெடுநாளைய கனவு. காரணம் அவரது ஸ்லிம்மான உடல்கட்டு விஷாலுக்கு ரொம்ப பிடித்து போனதுதான். அதிலும் ஒரு நடிகையால் சினிமாவுக்கு வந்து 10 வருடங்களாகியும் எப்படி இந்த அளவுக்கு உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள முடிந்தது என்று பலதடவை த்ரிஷாவை ஆச்சரியமாக சொல்லியிருக்கிறார் விஷால். அப்படி தன்னை அசர வைத்த த்ரிஷாவுடன் எப்படியும் டூயட் பாடி விட வேண்டும் என்ற அவரது தீராத தாகம், ஆனால் நான்கு முறை முயற்சி செய்த பிறகு இப்போது சமர் படத்தில்தான் அந்த ஆசை கைகூடியிருக்கிறது.

அதனால் இதுவரை நடித்த படங்களை விட சமர் படத்தில் அதிக ஈடுபாடு காட்டி நடித்துள்ள விஷால், த்ரிஷாவுடன் நடித்த காட்சிகள் ஓவர் நெருக்கம் காட்டியிருக்கிறார். அவரது ஆர்வத்தை ஆவலை நடவடிக்கைகளில் புரிந்து கொண்ட த்ரிஷாவும், தாராளம் காட்டியிருக்கிறார். இதனால் சமர் படத்தில் விஷால்-த்ரிஷா சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள் ராணாவுடன் த்ரிஷா நடித்ததை விடவும் காற்றுகூட புக முடியாத நெருக்கமாகி விட்டதாம்.

இதன்காரணமாக, ஒரு கட்டத்தில் தனக்குரிய காட்சிகள் குறைச்சலாக இருக்கிறது என்று த்ரிஷாவின் மனசு சங்கடப்பட, உடனடியாக டைரக்டர் திருவை அழைத்து, சுனைனா சீன்களை குறைத்து த்ரிஷாவின் சீன்களை அதிகப்படுத்துங்கள் என்று ஆர்டர் போட்டிருக்கிறார் விஷால். இதனால் வேறு வழியில்லாமல் அதற்கு உடன்பட்டிருக்கிறார் இயக்குனர். ஆக, விஷாலின் அன்பான அரவணைப்பில் சிக்கியிருக்கும் த்ரிஷா, இந்த படத்திற்கு பிறகு சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் இணைந்து நடிப்போம் என்றும் சொல்லி விஷாலின் பாசறையில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார் த்ரிஷா.