தேடல்

த்ரிஷாவுக்கு சரக்கு பாட்டில் அனுப்ப இந்து மக்கள் கட்சி முடிவு!

பெண்கள் மது அருந்துவது பற்றி த்ரிஷா பேசிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவருக்கு மதுபாட்டில்களை அனுப்பி வைக்க இந்து மக்கள் கட்சி முடிவு செய்துள்ளது. சமீபத்தில் விஷால்-த்ரிஷா நடிப்பில் வெளியான சமர் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனை கொண்டாடும் விதமாக சமீபத்தில் பிரஸ்மீட் ஒன்று சென்னையில் நடந்தது. அதில் பங்கேற்ற நடிகை த்ரிஷாவிடம் நீங்கள் இந்தபடத்தில் மது அருந்துவது போன்று நடித்துள்ளீர்கள், பெண்கள் மது குடிப்பது பற்றி தங்களது கருத்து என்ன என்று நிருபர்கள் கேட்டபோது, அது அவரவர் விருப்பம் என்று கூறினார். இதற்கு இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனையடுத்து அவருக்கு மதுபாட்டில்களை அந்தகட்சி முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் சென்னை நகர தலைவர் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், த்ரிஷா கூறிய கருத்து நமது கலாச்சாரத்திற்கு எதிரானது. அவரது கருத்து பெண்களை மது குடிக்க தூண்டும். இதுதொடர்பாக அவர் வருத்தமும் தெரிவிக்கவில்லை. எனவே அவருக்கு மதுபாட்டில்களை அனுப்ப உள்ளோம். கூடவே மதுவால் ஏற்படும் விளைவுகள் பற்றிய புத்தகமும் ஒன்றையும் அனுப்பி வைக்க உள்ளோம் என்றார்.