தேடல்

தூத்துக்குடி பள்ளி மாணவர்கள் எழும்பூர் ரயில் நிலையத்தில் மீட்பு

சென்னை : தூத்துக்குடியில் காணாமல் போன பள்ளி மாணவர்கள், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மீட்கப்பட்டனர். தூத்துக்குடி

மாவட்டம், காரப்பேட்டையை சேர்ந்த, வெங்கடேஷ்பிரபு, 14, செல்வகுமார், 13,

ஆகிய இருவரும், 9ம்வகுப்பு படித்து வருகின்றனர். தேர்வுக்கு படிக்காததால்,

மதிப்பெண் குறைந்துவிடும் என, நினைத்து, பெற்றோருக்கு பயந்து, நேற்று

முன்தினம் தூத்துக்குடி வந்துள்ளனர்.
அங்கிருந்து முத்துநகர் எக்ஸ்பிரஸ்

ரயிலில் ஏறி, நேற்று காலை, சென்னை எழும்பூர் வந்தனர். எங்கு செல்வது என,

தெரியாமல் தயங்கி நின்றிருந்த இருவரையும், ரயில்வே போலீசார் பிடித்து

விசாரித்தனர்.
இதில், தூத்துக்குடியிலிருந்து பெற்றோருக்கு தெரியாமல்

ஓடிவந்தது தெரியவந்தது. உடனடியாக, மாணவர்களின் பெற்றோர்களுக்கு, ரயில்வே

போலீசார் தகவல் தெரிவித்துவிட்டு, இருவரையும் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இவர்களின் பெற்றோர் சென்னை வந்ததும், அவர்களிடம் ஒப்படைக்கப்படுவர் என, ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.