தேடல்

"2ஜி' முறைகேடு: ஆர்.பி.சிங்கிடம் விசாரிக்க கோரிக்கை

புதுடில்லி:2ஜிஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக, மத்திய கணக்கு தணிக்கை அலுவலக முன்னாள் இயக்குனரான ஆர்.பி.சிங்கையும், பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணைக்கு அழைக்க வேண்டும் என, குழுவில்இடம் பெற்றுள்ளபா.ஜ., உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்த அனைத்து அம்சங்களையும் ஆய்வுசெய்த, மத்திய கணக்கு தணிக்கை அலுவலக முன்னாள் இயக்குனர் ஆர்.பி.சிங்,கடந்த சில தினங்களுக்கு முன், தனியார் டிவிக்குபேட்டி அளித்தார். அப்போது,2ஜி தொடர்பான வரைவு அறிக்கையில், எவ்வித இழப்பு பற்றியும் குறிப்பிடப்படவில்லை; யூகத்தின் அடிப்படையில் தான் அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது என்றார்.இந்த விவகாரம், பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில், இந்த முறைகேடு பற்றி விசாரிக்கும், பார்லிமென்ட் கூட்டுக் குழுவில் இடம் பெற்றுள்ள பா.ஜ., உறுப்பினர்கள், ஆர்.பி.சிங்கிடமும் விசாரிக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்துஉறுப்பினர்களில் ஒருவரான, யஷ்வந்த் சின்கா, கூட்டுக் குழுவின் தலைவர் சாக்கோவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், மத்திய அரசுக்கு, 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக, யூகத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வரைவு அறிக்கையில், ஆர்.பி.சிங்கைகையெழுத்திட நிர்பந்தித்தது யார் என்பது பற்றி தெரிய வேண்டும். அதற்கு அவரை அழைத்து விசாரிக்க வேண்டும் என, வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து சாக்கோ கூறுகையில், ஜே.பி.சி.,யின் அடுத்த கூட்டம், வரும், 12ல் நடைபெறுகிறது. அப்போது, இந்த கடிதம், ஜே.பி.சி., முன்வைக்கப்படும். பின், இது குறித்து உறுப்பினர்கள் முடிவு செய்வர், என்றார்.