தேடல்

2 நாள் பனிப்பொழிவு நீடிக்கும்'

சென்னை: சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பனிப்பொழிவு நீடிக்கும், என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட தமிழக முழுவதும் பகலில் வறண்ட வானிலை நிலவுகிறது. மாலை மற்றும் விடியற்காலையில் பனி கொட்டுகிறது. மூடுபனியால் தொலைவில் வரும் வாகனங்கள் தெரியாததால், சாலையில் பெரும்பாலான வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்ட படி சென்றன.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறுகையில்,சராசரியை விட வெப்ப அளவு இரவு நேரத்தில் குறைந்ததால் பனிப்பொழிவு அதிகமாக உணரப்படுகிறது. அடுத்த இரண்டு நாட்கள் இந்த பனிப்பொழிவு நீடிக்கும்,என்றார்.