தேடல்

2014ல் ஆட்சியமைப்போம்: ராஜ்நாத் சிங்

புதுடில்லி: எதிர்வரும் 2014 லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ., ஆட்சியமைக்கும் என அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். பா.ஜ., புதிய தலைவராக பொறுப்பேற்ற பின் கட்சியினரிடையே உரையாற்றிய அவர், 2014ம் ஆண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று, பா.ஜ., ஆட்சியமைக்கும் என்று தெரிவித்தார். மேலும், கட்காரியின் பின்னால் கட்சியினர் அனைவரும் ஒன்றிணைந்து, அவருக்கு ஆதரவாக நிற்பதாகவும் அவர் கூறினார்.