தேடல்

26 இருக்கைகளுடன் டிராவலர் வேன்

ஃபோர்ஸ் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம், தற்போது, "டிராவலர் -26' என்ற பெயரில் புதிய வேனை அறிமுகப்படுத்தியுள்ளது. உலகளவில், பெரிய பயணிகள் வேன் இது தான் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேனில், டிரைவரை தவிர்த்து, ஒரே நேரத்தில், 26 பேர் வரை பயணம் செய்ய முடியும். டில்லியில், கடந்த ஜனவரி மாதம் நடந்த, வாகன கண்காட்சியில், இந்த வேன், காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. புனேயில் உள்ள ஃபோர்ஸ் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் தொழிற்சாலையில், இதன் சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நடத்தப்பட்டு, தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.


இந்த வேனின் பின் பக்கத்தில், இருபுறமும், தலா இரண்டு டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது, கூடுதல் அம்சமாக கருதப்படுகிறது. மேலும், அனைத்து டயர்களுக்கும், டிஸ்க் பிரேக் வசதி அளிக்கப்பட்டுள்ளது. வேனில், 2.2 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் வசதி கொண்டது. "ஸ்டாண்டர்டு', "ஸ்கூல் பஸ்', "டீலக்ஸ்' என, மூன்று வேரியன்ட்களில் கிடைக்கும். அனைத்து வேரியன்ட்களிலும், பவர் ஸ்டியரிங், பொதுவான வசதியாக இடம் பெற்றுள்ளது. துவக்கத்தில், மஹாராஷ்டிரா மற்றும் கோவா மாநிலங்களில், இந்த வேன் விற்பனை செய்யப்படும். சில மாதங்களில், நாடு முழுவதும் விற்பனைக்கு வரும். இந்த வேனின் விலை ரூ.10.87 லட்சம், ரூ.11.16 லட்சம், ரூ.13.87 லட்சம் என வேரியன்ட்டுக்கு தகுந்தார் போல், நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை, எக்ஸ் ஷோரூம், புனே. டீலக்ஸ் வேரியன்ட் வேனில் மட்டும், "ஏஸி' வசதி இடம் பெற்றுள்ளது.


தொடர்புடைய செய்திகள்