தேடல்

27 தமிழக மீனவர்கள் கைது

கொழும்பு: இலங்கை கடற்பகுதியில் அத்துமீறி மீன்பிடித்ததாக, 27 தமிழக மீனவர்களை அந்நாட்டு கடற்படை கைது செய்துள்ளது. இது தொடர்பாக, இலங்கை கடற்படை செய்தித்தொடர்பாளர் கோசல வர்ணகுல சூர்யா கூறுகையில், இலங்கையின் கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக 27 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களது படகுகள் மற்றும் வலைகளை பறிமுதல் செய்த கடற்படையினர் அவற்றை திரிகோணமலை துறைமுகத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.