தேடல்

3,300 மெகா வாட், "‹ப்பர் கிரிடிக்கல்' அனல் மின்நிலையம்

சென்னை:தமிழகத்தில், 3,300 மெகா வாட் திறன் கொண்ட, புதிய, சூப்பர் கிரிட்டிக்கல் அனல் மின் நிலையம் அமைக்க, முதல் யூனிட்டிற்கு, டெண்டர் கோரப்பட்டுள்ளது, என, தமிழக மின் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார்.
சட்டசபையில், கவர்னர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் கீழ், தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜா, தமிழகத்தின் மின் நிலைமை குறித்து பேசினார். அப்போது, தமிழக மின் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அளித்த விளக்கம்:
தி.மு.க., ஆட்சி முடியும் போது, மின் உற்பத்திக்கும், தேவைக்கும் இடையில், 4,000 மெ.வா., இடைவெளி ஏற்பட்டது. ஆனால், அவர்கள் ஐந்தாண்டுகளில் அதிகப்படுத்திய மின் திறன், 206 மெ.வா., மட்டுமே. தொடர்ந்து, எந்த திட்டத்தையும் அவர்கள் விரைவு படுத்தவில்லை.
தற்போது, மின் பிரச்னைக்கு நாங்கள் பொறுப்பேற்கிறோம்; நாங்கள் பொறுப்பை தட்டிக் கழிக்கவில்லை. இந்த ஆண்டு, ஜூன் மாதத்திற்குள், மின் வெட்டு முழுமையாக நீக்கப்படும்.
தற்போது புதிய திட்ட்ஙகள் படிப்படியாக, செயல்படுத்தப்பட்டு வருகின்றன.மேட்டூரில், 600 மெகாவாட் திட்டம், உற்பத்தி துவங்கப்பட்டு, சிறிய தடங்கல் ஏற்பட்டது. தற்போது, மீண்டும் உற்பத்தி துவங்கியுள்ளது.
வல்லூரில், 500 மெ.வா., முதல் அலகில் உற்பத்தி துவக்கப்பட்டுள்ளது. இரண்டாவது அலகில், மார்ச் மாதத்திலும், மூன்றாவது யூனிட்டில், ஆகஸ்டிலும் உற்பத்தி துவக்கப்படும்.
வடசென்னையில், 600 மெ. வா., திறன் கொண்ட இரண்டு அலகுகளில், முதல் அலகின் உற்பத்தி துவக்கப்பட்டுள்ளது. இரண்டாம் அலகின் உற்பத்தி விரைவில் துவக்கப்படும்.
செய்யூரில், தலா, 660 மெ.வா., வீதம் ஐந்து அலகுகள் மூலம்,3,300 மெ.வா., திறன் கொண்ட, சூப்பர் கிரிடிக்கல் அனல் மின் நிலையம் அமைப்பதற்கு, முதல் அலகிற்கான, ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. மற்ற அலகுகளுக்கான ஒப்பந்தம், இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.