தேடல்

40 அடி உயர கிரேனில் இருந்து விழுந்தவர் பலி

சென்னை : சென்னை துறைமுகத்தில், 40 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்த, துறைமுக கிரேன் ஊழியர் பலியானார்.
விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் வெங்கடேசன், 52. இவர் துறைமுகத்தில் சிவில் பிரிவில், இளநிலை பொறியாளராக பணியாற்றி வந்தார்.
நேற்று கப்பல் நிறுத்துமிடத்தில், சரக்குகளை கையாளும் கிரேனில் பணியாற்றி கொண்டிருந்த போது, 40 அடி
உயரத்திலிருந்து கீழே விழுந்தார்.
இதில்

சம்பவ இடத்திலேயே, வெங்கடேசன் பரிதாபமாக பலியானார். வெங்கடேசனுக்கு

திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ளனர். சம்பவம் குறித்து, துறைமுக போலீசார்

விசாரிக்கின்றனர்.