தேடல்

6 தங்கம் வென்ற அக்னீஷ்வர்

சென்னை: அமெரிக்காவில் நடந்த நீச்சல் போட்டிகளில், இந்தியாவின் அக்னீஷ்வர் 6 தங்கப்பதக்கம் வென்றார்.அமெரிக்காவில் சன்பெல்ட் சாம்பியன்ஷிப் நீச்சல் தொடர் சமீபத்தில் நடந்தது. இதில் அமெரிக்கா, ஈரான், ஜப்பான் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 900 பேர் பங்கேற்றனர். இதில் இந்தியாவில் இருந்து தமிழக வீரர் அக்னீஷ்வர் கலந்து கொண்டார்.இவர், 50 மீ., 100 மற்றும் 200 மீ., பிரஸ்ட் ஸ்டிரோக், 100 மற்றும் 200 மீ., தனிநபர் மெட்லே, 100 மீ., பிளை என, பங்கேற்ற ஆறு போட்டிகளிலும் வெற்றி பெற்று, 6 தங்கம் கைப்பற்றி அசத்தினார்.