தேடல்

64 அணிகள் பங்கேற்கும் கிரிக்கெட்போட்டி

சென்னை

: அறுபத்து நான்கு அணிகள் பங்கேற்கும், கிரிக்கெட் போட்டி, சென்னையில்

நடக்கிறது.மெட்ராஸ் சவுத் ரவுண்ட் டேபிள் 39 என்ற தொண்டு நிறுவனம்

சார்பில், வரும் 26ம் தேதி முதல் 45 நாட்களுக்கு, 111 போட்டிகள்

நடக்கின்றன. இதில், மொத்தம் 64 அணிகள் பங்கேற்கின்றன. இந்த போட்டியில்,

சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு, ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.

இதில், வரும் வருவாய் ஏழை குழந்தைகள் படிக்கும் பள்ளிகளுக்கு நாற்காலி,

மேஜை மற்றும் நோட்டு புத்தகம் வாங்கி தரவும், குடிநீர் தொட்டி, கழிவறைகள்

கட்டி தரவும் பயன்படுத்தப்படும் என, அந்த தொண்டு நிறுவனம் தெரிவித்து

உள்ளது.