தேடல்

80 வயதான யானை மரணம்

ஊட்டி: அதிக வயதான யானை காப்பகத்தில் மரணமடைந்தது அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக யானைகள் வளர்ப்பு முகாமில் இருந்த 80வயதான யானை ரதி இன்று உயிரிழந்தது. இந்தியாவில் யானைகளின் சராசரி வயது 55 முதல் 60 வரை உள்ளது. ஆனால் ரதி 80 வயதில் இறந்தது குறிப்பிடத்தக்கது. இது அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.